வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் - உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என விவசாயிகள் திட்டவட்டம்

Jan 13 2021 8:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை எனவும், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில், லட்சக்‍கணக்‍கான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டம் 50வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 80 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணும் வகையில் 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவினர் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்பதால், மத்திய அரசுக்‍கு ஆதரவாகவே செயல்பாடுவார்கள் என்றும், அக்‍குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பலனும் ஏற்படாது எனவும் பாரதிய கிஸான் யூனியனை சேர்ந்த திரு.பல்பீர் சிங் ராஜேவால் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், குழுவை அமைத்துள்ள நடவடிக்‍கையால் மத்திய அரசு இப்பிரச்னையிலிருந்து நழுவிவிட்டதாகவும், திரு.பல்பீர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00