ராணுவ தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி - டாங்கிகள், குதிரைப்படைகளுடன் மிடுக்காக அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்கள்
Jan 13 2021 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணுவ தினத்தையொட்டி, டெல்லியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், டாங்கிகள், குதிரைப்படைகளுடன் வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, நாளை மறுநாள் நடைபெறவுள்ள ராணுவ தின நிகழ்ச்சியில் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர் இழந்த ராணுவ வீரர்களின் மூன்று மனைவிகள், ராணுவ தின அணிவகுப்பின் சீருடை ஒத்திகையின் போது விருதுகளைப் பெற உள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக டெல்லியில் உள்ள Cariappa மைதானத்தில், ராணுவ வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். பிரமாண்ட டாங்கிகள், குதிரைப்படைகளுடன் இணைந்து இந்திய வீரர்கள் மிடுக்குடன் அணிவகுப்பில் பங்கேற்றனர்.