அகில இந்திய வானொலி நிலையம் மூடப்படவில்லை - ஊடங்கங்களில் வெளியான செய்திக்கு பிரசார் பாரதி விளக்கம்
Jan 14 2021 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அகில இந்திய வானொலி நிலையம் எந்த மாநிலத்திலும் மூடப்படவில்லை என பிரசார் பாரதி விளக்கமளித்துள்ளது.
அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுவதாக நாடு முழுவதும் பல ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆதாரமற்றவை எனவும், தவறானவை எனவும் பிரசார் பாரதி தெளிவாகக் கூறியுள்ளது. எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் எந்த அகில இந்திய வானொலி நிலையமும், தரம் குறைக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை என பிரசார் பாரதி மேலும் கூறியுள்ளது. 2021-2022ம் நிதியாண்டில், பல முக்கிய திட்டங்கள் அமல்படுத்த தயாராக உள்ளதாலும், நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட புதிய FM ரேடியோக்களுடன் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தவுள்ளதாலும், அகில இந்திய வானொலி நிலையங்களை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்டிருப்பதாக பிரசார் பாரதி மேலும் அறிவித்துள்ளது.