சீன ஆப் மூலம் கடன் வழங்கி கந்துவட்டி வசூலித்த வழக்கு - ரா மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை

Jan 14 2021 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆன்லைனில் கடன் தந்து மோசடியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் ரா மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் கடன் மோசடி வழக்கில் சீன நாட்டினர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிம்கார்டு வழங்கியதாக 4 பேரை மத்திய பிரிவு போலீசார் கைது செய்து மொத்தமாக 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து புலன் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்று அமலாக்கத் துறையினர் விசாரணையை தொடங்கினர். இவ்வழக்கில் கைதான சீனர்கள் குறித்த விவரம், குற்றப் பின்னணி கேட்டு டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்ததால் அவர்களின் விவரங்களை காவல்துறை கோரி இருந்தது. இந்நிலையில் சீன செயலி மூலம், கந்துவட்டி வசூலித்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீனர்களிடம் ரா மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00