வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை மத்திய அரசு அழிக்‍கப் பார்க்‍கிறது - மதுரையில் ராகுல் காந்தி பேட்டி

Jan 14 2021 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகள் போராட்டத்தை அலட்சியம் செய்வது மட்டுமல்ல, அவர்களை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைப்பதாக காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்‍கட்டைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரு.ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது பொங்கல் பானையில் அரிசியிட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கிராம மக்களோடு அமர்ந்து திரு. ராகுல்காந்தி உணவருந்தினார்.

இதைத் தொடர்ந்து, மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ராகுல்காந்தி, ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்ததாகவும், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறுவது தவறானது என்றும் தெரிவித்தார்.

தமிழ் மொழியை, கலாச்சாரத்தை, தமிழ் உணர்வை ஒடுக்கிவிடலாம் என ஆட்சியாளர்கள் நினைப்பதாகவும், இந்தியாவில் ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு சிந்தனை இருப்பதாகக் கூறுவது தவறு என்றும் குறிப்பிட்டார். விவசாயிகள் போராட்டத்தை அலட்சியம் செய்வது மட்டுமல்ல - அவர்களை அழித்துவிடலாம் என்றும் மத்திய அரசு நினைப்பதாக திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

ஒருசில தொழிலதிபர்களின் நலனுக்காகவே ‍மோதி அரசு செயல்பட்டு வருவதாகவும், அவர்களின் நலனுக்காகவே விவசாயிகளின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாகவும் திரு. ராகுல் காந்தி கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00