தலைநகர் டெல்லியில் 56-வது நாளாக தொடரும் போராட்டம் - விவசாயிகளுடன், இன்று நடைபெறவிருந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைப்பு

Jan 19 2021 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெறவிருந்த பத்தாம் கட்ட பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 56 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மழை, கடுங்குளி‌ரையும் பொருட்படுத்தாமல் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தால், பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9 கட‌்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இந்நிலையில், விவசாய சங்கப் பிரதிநிகளுடன் மத்திய அரசு இன்று நடத்தவிருந்த பத்தாவது கட்ட பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட ‍வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒரே கோரிக்கையாக உள்ள நிலையில், அதை செய்யாமல் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கிடையே வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நான்கு பேர் அடங்கிய குழுவின் கூ‌ட்‌டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஒருவர், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து குழுவிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00