திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்‍கும் மத்திய அரசின் முடிவுக்‍கு கேரளா அரசு எதிர்ப்பு - வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஒப்பந்தத்தை இறுதி செய்ததற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்

Jan 20 2021 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை, உச்சநீதிமன்றத்தின் அனுமதியின்றி அதானி குழுமத்திடம் ஒப்படைக்‍கும் மத்திய அரசின் முடிவுக்‍கு முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுவிடம் ஒப்படைக்‍கும் இந்திய விமான நிலைய ஆணையரகத்தின் முடிவுக்‍கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில்​ தொடரப்பட்ட வழக்‍கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கு கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியின்றி இந்த நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். நாட்டிலுள்ள விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் தாரைவார்க்கும் நடவடிக்‍கை விதிகளை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ள திரு.பினராயி விஜயன், திருவனந்தபுரம் விமான நிலையம் அதானி குழுமத்திடம் ஒப்படைக்‍கப்பட்டாலும், எந்தவித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாது என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00