டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம் : பஞ்சாப், நாஷிக்கில் பிரம்மாண்ட பேரணி வேளாண் சட்டங்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

Jan 24 2021 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப், நாசிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நாளை மறுதினம் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறவுள்ளது. விவசாயிகளின் இந்த பிரம்மாண்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு விரைந்துள்ளனர். அதேநேரம் விவசாயிகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை பல மாநிலங்களில் பேரணி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பதற்காக நாசிக்கிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பேரணியாக சென்றனர். அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர். டிராக்டர்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என பலவகை வாகனங்களிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00