பீமா குரேகான் சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் - வரவர ராவ், ஸ்டான்சுவாமி ஆகியோரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

Jan 25 2021 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

பீமா குரேகான் கலவரம் தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள சமூக ஆர்வலர்கள் திரு.வர வர ராவ், திரு.ஸ்டான் சுவாமி உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு ஐ.நா. மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டஷ் ஆட்சியின்போது, புனே அருகிலுள்ள பீமா கோரேகான் என்ற இடத்தில், மராட்டிய மன்னர் பேஷ்வா பாஜிராவ் படைகளை, ஆங்கிலேய படையிலிருந்த தாழ்த்தப்பட்டோர் படைப்பிரிவு விரட்டியடித்தது. இந்த வெற்றியை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஊர்வலம் நடைபெறும் நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இந்துத்துவா இயக்கத்தினர், ஊர்வலத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கவிஞர் திரு.வரவர ராவ், சமூக ஆர்வலர்கள் திரு.கவுதம் நவலேகா, திரு.ஸ்டேன் சுவாமி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில், 80 வயதை கடந்த திரு.வரவர ராவிற்கும், திரு.ஸ்டான் ஸ்வாமிக்கும், சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உரிமை கூட்டத்தில் பேசிய ஐ.நா.மனித உரிமை உயர் ஆணையர் மீச்செல், இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதை குறித்து பேசினார். இதுகுறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பு, பீமா குரேகான் கலவரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களின் நிலை கவலை அளிப்பதாகவும், குறைந்தபட்சம் அவர்களை ஜாமீனிலாவது விடுவிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00