மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நடைபெறவிருக்கும் டிராக்டர் பேரணி - டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் டிராக்டர்களுடன் இன்றே குவியத் தொடங்கிய விவசாயிகள்

Jan 25 2021 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூர் பகுதியில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் ட்ராக்டர்களுடன் குவியத் தொடங்கியுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி எல்லையில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம், 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து, நாளை குடியரசு தினத்தன்று லட்சக்கணக்கான டிராக்டர்களில், பேரணியாக செல்லவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறையும் அனுமதி வழங்கியுள்ளது. காசிப்பூர், சிங்கு மற்றும் டிக்ரி எல்லை வழியாக, டெல்லிக்குள் நுழைய விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பங்கேற்பதற்காக, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான விவசாயிகள், ட்ராக்டர்களுடன் காசிப்பூர் எல்லையில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்த பேரணியில் பெண்களும் டிராக்டர்களை ஓட்டி செல்லும் காட்சிகளை காணமுடிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00