காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் - கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை
Jan 25 2021 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி காங்கிரஸிலிருந்து அமைச்சர் திரு.நமச்சிவாயம் நீக்கப்படுவதாக, மாநிலத் தலைவர் திரு.ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள திரு.நமச்சிவாயம், ஆளும் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதன் காரணமாக, காங்கிரசிலிருந்து விலகி, அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தனது தொகுதியான வில்லியனூரில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் திரு.நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால், திரு.நமச்சிவாயம், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, மாநிலத் தலைவர் திரு.ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, புதுச்சேரி சபாநாயகரை இன்று சந்தித்த திரு.நமச்சிவாயம், தனது எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். திரு.நமச்சிவாயத்திற்கு ஆதரவாக, ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ. திரு.திருப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.