சிக்‍கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு - இந்திய வீரர்களின் எதிர் தாக்குதலில் 20 சீன வீரர்கள் காயம்

Jan 25 2021 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா, சீனா இடையே 9-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்த முடிந்த நிலையில், சிக்‍கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி இன்று முறியடிக்‍கப்பட்டது. இந்திய வீரர்களின் எதிர் தாக்குதலில் 20 சீன வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சீன ராணுவத்தின் அத்துமீறலும், ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த பதற்ற சூழலை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு, இந்தியா-சீனா இடையே ராணுவ ரீதியிலும், ராஜீய ரீதியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்தவகையில் லடாக் எல்லையில் நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், சிக்கிம் எல்லையின் நாகுலா பாஸி பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அங்கு இரு படைகளும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பிலும் வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிக்‍கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி முறியடிக்‍கப்பட்டது. இந்த நிகழ்வின்போது சீன வீரர்களை, இந்திய வீரர்கள் விரட்டி அடித்து உள்ளனர். சீன வீரர்கள் 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00