புதுச்சேரியில் நீடிக்கும் அரசியல் பரபரப்பு - எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம்

Jan 25 2021 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி மக்‍களின் பிரச்னைகளைத் தீர்க்‍க காங்கிரஸ் தலைமையும், முதலமைச்சர் திரு.நாராயணசாமியும் எந்தவித நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என, திரு.நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள திரு.நமச்சிவாயம், ஆளும் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதன் காரணமாக, காங்கிரசிலிருந்து விலகி, அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தனது தொகுதியான வில்லியனூரில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் திரு.நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால், திரு.நமச்சிவாயம், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்‍கப்படுவதாக, மாநிலத் தலைவர் திரு.ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி சபாநாயகர் திரு.சிவகொழுந்தை இன்று சந்தித்த திரு.நமச்சிவாயம், தனது எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.நமச்சிவாயம், புதுச்சேரி மாநில மக்‍கள் பிரச்னைகளைத் தீர்க்‍க காங்கிரஸ் தலைமையும், முதலமைச்சர் திரு.நாராயணசாமியும் எந்தவித நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என குற்றம் சாட்டினார்.

இதனிடையே, திரு.நமச்சிவாயத்திற்கு ஆதரவாக, ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ. திரு.திருப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 12-ஆக குறைந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00