உலகளவில் சுகாதாரத்துறையில் இந்தியா மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரிப்பு - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
Feb 23 2021 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகளவில் சுகாதாரத்துறையில் இந்தியா மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து பிரதமர் திரு. மோதி வெபினார் மூலம் இன்று உரையாற்றினார். பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் கோடி ரூபாய் என்பது அசாதாரண தொகை எனத் தெரிவித்தார். நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அனைத்து சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, சுகாதாரத்துறையில் மத்திய அரசு மிகப் பெரிய தொகையை முதலீடு செய்வதாகக் கூறினார். 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காச நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக வைத்துள்ளதாக தெரிவித்தார். உலகளவில் சுகாதாரத்துறையில் இந்தியா மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக கூறினார். கொரோனா வைரஸ் தொற்று, எதிர்காலத்தில் இதே போன்ற சவால்களை எதிர்த்து போராட நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.