நிலக்கரி ஊழல் வழக்கு - திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மனைவியிடம் 3 மணி நேரம் விசாரணை

Feb 23 2021 6:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., திரு. அபிஷேக் பானர்ஜியின் மனைவியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்.

நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜியின் உறவினரும், மக்களவை உறுப்பினருமான திரு. அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருச்சிரா பானர்ஜி மற்றும் அவரது சகோதரி மேனகா காம்பிருக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். மேனகா காம்பிரின் இல்லத்திற்கு அண்மையில் சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள், நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக விசார‌ணை நடத்தினர். இதற்கிடையே, சி.பி.ஐ., அனுப்பிய சம்மனுக்கு பதில் அனுப்பிய திருமதி. ருச்சிரா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில், இன்று விசாரணை நடத்த வரலாம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், சி.பி.ஐ., அ‌திகாரிகள் வருவதற்கு முன்பு, திரு. அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி சென்றார். அவர் அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களி‍லேயே, திரு. அபிஷேக் பானர்ஜி இல்லத்திற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் வந்தனர். திருமதி. ருச்சிரா பானர்ஜியிடம் மூன்று மணி ‍நேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை ‌கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00