பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யில் சேர்க்க ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும் - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
Feb 23 2021 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல் மற்றும் டீசலை, ஜி.எஸ்.டி.,க்குள் சேர்ப்பது குறித்து, ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதாகவும், கொரோனா காரணமாக உற்பத்தியும் பாதிக்கப்படுவதால், உலகளாவிய வினியோகமும் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக, பிரதமர் திரு. மோதிக்கு, காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி கடிதம் எழுதியது குறித்த கேள்விக்கு பதிலளித்த திரு. தர்மேந்திர பிரதான், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிராவில் தான், அதிகபட்ச வரி விதிக்கப்படுவதாகவும், பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி.,க்குள் சேர்ப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.