விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான டூல் கிட்டை பகிர்ந்த வழக்கு - முன் ஜாமின் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சாந்தனு மனு
Feb 23 2021 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான டூல் கிட்டை பகிர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தனு, முன் ஜாமின் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான க்ரேடா தன்பெர்க் பதிவிட்டிருந்தார். இந்த டூல் கிட்டை பகிர்ந்ததற்காக பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞரான நிகிதா மற்றும் பொறியாளர் சாந்தனுவும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இருவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றுள்ளனர். இதில், சாந்தனுவின் முன்ஜாமின் வரும் 26-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து, சாந்தனு முன் ஜாமின் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.