விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான டூல் கிட்டை பகிர்ந்த வழக்‍கு - சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்‍கு ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையுடன் ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

Feb 23 2021 6:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
டூல்கிட் வழக்கில், சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமின் வழங்கி, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்யும் வகையில், ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பர்க் தனது டிவிட்டரில் டூல்கிட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனை, டிவிட்டரில் பகிர்ந்ததற்காக, பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி உள்ளிட்ட மூன்று பேரை கடந்த 13-ம் தேதி, டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமின்கோரி திஷாரவி மனுதாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமின் வழங்க டெல்லி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே திஷா ரவிக்கு மூன்று நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்க, டெல்லி போலீசார் அனுமதி கோரினர். ஆனால், ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஒருநாள் போலீஸ் காவல் முடிவடைந்து திஷாரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தேச துரோக வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. பிணைத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00