EIA - 2020 - பிராந்திய மொழிகளில் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது : மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Feb 25 2021 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை பிராந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாதென டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

EIA-2020 என்ற புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை, மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இந்த வரைவு அறிக்‍கையினால் நாட்டின் இயற்கை வளங்களுக்‍கு பேராபத்து ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த வரைவு அறிக்கை ஆங்கிலம், மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் EIA-2020 வரைவு அறிக்‍கையை வெளியிட உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்திலேயே முறையிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் திரு.D.N.Patel, திரு.Prateek Jalan ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நாட்டின் கடைக்கோடியில் வசிக்கும் மக்களின் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும் என அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், நாட்டு மக்கள் கருத்து தெரிவிப்பதால் அரசுக்கு என்ன அநீதி நிகழ்ந்துவிடப்போகிறது எனக் கேள்வி எழுப்பினர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை பிராந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00