கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எதிரொலி - கூடலூர் எல்லையில் பரிசோதனை சான்றிதழ் இல்லாத சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்

Feb 26 2021 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் நீலகிரிக்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகள், எல்லையிலேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி, கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கக் கூடிய பகுதியாக உள்ளது. கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வர 7 சோதனைச்சாவடிகள் உள்ளன. நாடுகாணி, பாட்டவயல், நம்பியார், தாளூர், சோலாடி உள்ளிட்ட சோதனைச்சாவடிகள் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நீலகிரிக்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகள், 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தி அதற்கான சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து எந்தவித முன்னறிவிப்பும் செய்யப்படாததால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், கூடலூர் எல்லையிலிருந்து ஏமாற்றத்துடன் கேரளாவுக்கு திரும்பிச் செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00