பெட்ரோலியப் பொருட்களை GST வரி விதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் - மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வலியுறுத்தல்

Mar 1 2021 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அடிக்‍கடி அதிகரித்து வருவதால், பெட்ரோலியப் பொருட்களை GST வரி விதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. K.V.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில், முன் எப்போதும் இல்லாத அளவுக்‍கு பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அடிக்‍கடி உயர்த்தப்படுவதால் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்‍கள் மிகுந்த இன்னலுக்‍கு ஆளாகியுள்ளனர். பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்‍கு 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. டீசல் விலை லிட்டர் ஒன்றுக்‍கு 90 ரூபாய்க்‍கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், லாரிகள், Truck-கள், வேன்கள் மற்றும் பல்வேறு வாகனங்களின் வாடகைகள் பன்மடங்கு அதிகரித்து, உணவுப் பொருட்கள், உணவு தானியங்கள், காய்கறிகள், பழவகைகள் மற்றும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய அரசு மீது நாட்டு மக்‍களுக்‍கு அதிருப்தி அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களை, GST எனப்படும் சரக்‍கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டுவரும் யோசனைக்‍கு, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. கே.வி. சுப்பிரமணியன் ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும், இதுதொடர்பான முடிவை GST கவுன்சில்தான் எடுக்‍க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். FICCI எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே உரையாற்றிய அவர், பெட்ரோலியப் பொருட்களை GST வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவது, வரவேற்கத்தக்‍க நடவடிக்‍கைதான் என்றும், அதே சமயம், GST கவுன்சில்தான் இதுகுறித்து முடிவெடுக்‍க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00