நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி தொடக்கம் - மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சிறப்பு முகாம்களை அமைத்து ஏற்பாடு

Mar 1 2021 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் 60 வயதுக்‍கு மேற்பட்டோருக்‍கு கொரரேனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

உலகை அச்சுறுத்திய வரும் கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்‍கு செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 60 வயதுக்‍கு மேற்பட்டோருக்‍கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கப்பட்டது. அங்கு வந்திருந்த மூத்த குடிமக்‍கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இப்பணியினை மத்தியபிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

மும்பையில் உள்ள பி.கே.சி ஜம்போ மருத்துவமனையில் மூத்த குடிமக்‍கள் ஆர்வத்துடன் வந்திருந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

60- வயதுக்‍கு மேற்பட்டோருக்‍கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள், இணையதளத்திலும், ஆரோக்கிய சேது செயலியிலும் தாங்களாகவே முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. எங்கு, எப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் தேர்வுசெய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டள்ளது.

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வயதைக் குறிப்பிடும் மருத்துவரின் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, தொழிலாளர் சான்றிதழ் என இவற்றில் ஏதாவது ஒன்றைக் கொண்டு சென்றும், மையங்களில் நேரில் பதிவு செய்தும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும் என்றும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00