நாடு முழுவதும் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு

Mar 1 2021 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரசில் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ் அண்மையில் இந்தியாவுக்கும் பரவியது. அந்த வரிசையில் தென்னாப்பிரிக்கா, பிரசில் நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய பலருக்கும், வெவ்வேறு வகையான உருமாறிய கொரோனா தொற்று பரவியது. இன்று ஒரேநாளில் 19 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. இதனால் பிரிட்டன், பிரசில், தென்னாப்பிரிக்க வகை உருமாறிய தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்தது. இதில் 187 பேருக்கு பிரிட்டன் கொரோனா பரவியது. இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் வீரியமும், வேகமாக பரவும் தன்மையும் கொண்டது என்றும், இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரிடம் கொரோனா தடுப்பூசி எந்த வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பியவர்களிடம் கொரோனா பரிசோதனையை தீவிரமாக அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00