பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என குற்றவாளியிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

Mar 1 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என குற்றவாளியிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.பாப்டே கேள்வி எழுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அரசு ஊழியரான Mohit Subhash Chavan என்பவர், பள்ளிச்சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாகவும், அதற்கு சிறுமி மறுத்ததாகவும் தெரிகிறது. ஆனால் தற்போது 18 வயது பூர்த்தியானதால், திருமணம் குறித்து Mohit Subhash Chavan-னிடம் பேசிய போது, ஏற்கனவே தனக்கு திருமணமாகிவிட்டது என கூறி அவர் மறுத்துள்ளார். இதனால், பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரி, Mohit Subhash Chavan உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.பாப்டே, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்களா என குற்றம் சாட்டப்பட்ட Mohit Subhash இடம் கேள்வி எழுப்பினார். தாங்கள் வற்புறுத்தவில்லை, ஆனால் தாங்கள் மறுத்தால் கைதாவதோடு, அரசு வேலையும் பறிபோகும் என தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த பேச்சு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி நீதிபதி கூறுவது, கிராமங்களில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து போல இருக்கிறது. கைதாவதிலிருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி, Mohit Subhash உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00