கேரள தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கு - ஜாமி‌ன் கொடுக்கப்பட்டதை எதிர்த்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Mar 5 2021 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்கக் கடத்தல் வழக்கில், கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் திரு. சிவசங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமி‌னை எதிர்த்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கக் கோரி, அவருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு, கடந்தாண்டு தங்கக் கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனின் முதன்‌மை செயலாளராக இருந்த திரு. சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, அமலாக்கத் துறை, சுங்கத் துறை, சிபிஐ தனித்தனியே விசாரித்து வருகிறது. இதற்கிடையே, திரு. சிவசங்கருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது. கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்‌பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்கக்கோரி சிவச‍ங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00