தங்கம் மற்றும் டாலர் கடத்தல் கேரள முதலமைச்சருக்கு தெரிந்தே நடத்தப்பட்டது : இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்

Mar 6 2021 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்கம் மற்றும் டாலர் கடத்தல், கேரள முதலமைச்சருக்கு தெரிந்தே நடத்தப்பட்டதாக, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சல் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்ட வழக்கில், சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கும் கடத்தி உள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ, சுங்க இலாகா மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. டாலர் கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள பொருளாதார நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நடந்தபோது சிறையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், டாலர் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்த முக்கிய தகவல்களை ரகசிய வாக்குமூலமாக தெரிவிக்க வேண்டும் என்றும் சொப்னா நீதிமன்றத்தில் கூறினார். இதையடுத்து, 164 சட்ட பிரிவின் கிழ் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதில் கேரள முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகருக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00