மேற்கு வங்கத்தில் திரிணாமூல் கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பட்டியல் - ஒரே கட்டமாக வெளியிட்டார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி

Mar 6 2021 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களின் பட்டியலையும் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி ஒரே கட்டமாக வெளியிட்டுள்ளார்.

எட்டு கட்டங்களாக ச‌ட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 38 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியின் வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின், திரிணாமுல் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை செல்வி.மம்தா பானர்ஜி வெளியிட்டார். மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாகவும், 3 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடவுள்ளதாகவும் செல்வி.மம்தா பானர்ஜி தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை எனத் தெரிவித்த செல்வி.மம்தா பானர்ஜி, தான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். இந்த 291 வேட்பாளர்களில் 50 பெண் வேட்பாளர்களுக்கும், 42 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செல்வி.மம்தா பானர்ஜி, இளம் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00