5 மாநிலத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை - கடந்த 7 நாட்களாக ஒரே விலையில் விற்பனை

Mar 6 2021 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலியாக பெட்ரோல்-டீசல் விலை 7-வது நாளாக இன்றும் மாற்றமின்றி காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ள போதிலும், மத்திய-மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில், பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனிடையே, 2 வாரங்களுக்‍கும் மேலாக நாள்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுவந்த பெட்ரோல்-டீசல் விலை 7-வது நாளாக மாற்றமின்றி நீடிக்‍கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 93 ரூபாய் 11 காசுக்‍கும், டீசல், 86 ரூபாய் 45 காசுக்‍கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாத இறுதி வரை பெட்ரோல்-டீசல் விலை, பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்‍கப்பட்டதன் காரணமாகவே பெட்ரோல்-டீசல் விலை ஏற்றமின்றி உள்ளதாக பொதுமக்‍கள் கருதுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00