குஜராத்தில் மீண்டும் பறவைக்காய்ச்சல் - கறிக்கோழி, முட்டை விற்பனைக்கு தடை

Mar 6 2021 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

பறவைக்‍ காய்ச்சல் பீதி காரணமாக குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளில் கறிக்‍கோழி மற்றும் முட்டை விற்பனைக்‍கு தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்‍கு இடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் வடமாநிலங்களில் பறவை காய்ச்சல் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்‍கைக்‍குபின், பறவைக்‍ காயச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பறவை காய்ச்சல் பீதி குஜராத்தில் பரவி வருகிறது. அகமதாபாத்தின் சோலா பகுதியில் கோழிகள் திடீரென இறந்ததால் பறவைக் காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சோலா பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கறிக்கோழி, முட்டை விற்பனைக்‍கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முட்டை மற்றும் கறிக்கோழி இருப்பு உணவுப் பொருட்களை அழிக்கவும் அகமதாபாத் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து, பாதிக்‍கப்பட்ட கோழி பண்ணைகளிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து கோழிகள், முட்டைகள், கோழி தீவினம் ஆகியவை அழிக்‍கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்திலும் ஆங்காங்கே காகங்கள் இறந்துகிடந்ததையடுத்து பறவைக்‍காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00