கொரோனா பரவலைத் தடுக்கவே ரயில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு - ரயில்வேதுறை விளக்கம்

Mar 6 2021 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவல் கூட்ட நெரிசலை தவிர்க்‍கவே, ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்‍கெட் விலை 50 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் விளக்‍கம் அளித்துள்ளது.

ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை அண்மையில் உயர்த்தப்பட்டது. சில ரயில் நிலையங்களில் 10-லிருந்து 30 ரூபாயாகவும், சில ரயில் நிலையங்களில் 50 ரூபாய் வரையும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை அதிகரிக்‍கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்‍கள் நலன்கருதி, கொரோனா பரவலை தடுக்கும் வகையிலேயே, அதிக மக்கள் கூடும் சில ரயில் நிலையங்களில் மட்டும் பிளாட்ஃபார்ம் டிக்‍கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் விளக்‍கம் அளித்துள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கையான இது, பல ஆண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், பண்டிகை காலங்களிலும் இது போன்று விலை ஏற்றப்பட்டு பின்னர் விலக்‍கிக்‍கொள்ளப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00