அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் - 70 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

Mar 6 2021 2:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 70 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்டப் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

126 இடங்களைக்‍ கொண்ட அசாம் சட்டப்பேரவைக்‍கு வரும் 27-ம் தேதி முதல், ஏப்ரல் 6-ம் தேதி வரை 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. மே 2-ம் தேதி வாக்‍கு எண்ணிக்‍கை நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக்‍ கூட்டணியில் பாரதிய ஜனதா 92 தொகுதிகளிலும், அசாம் கண பரிசத் 26 தொகுதிகளிலும், மக்‍கள் விடுதலைக்‍ கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், 70 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்டப் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இதில், மஜூலி தொகுதியில் முதலமைச்சர் திரு.சர்பானந்தா சோனாவாலும், நிதியமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியிலும், மாநில பா.ஜ.க. தலைவர் திரு. ரஞ்சித் தாஸ் படச்சர்குச்சி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00