இனிவரும் 5 கட்ட தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் கூடாது - மத்திய பாஜக அரசுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
Apr 7 2021 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்கத்தில் இனிவரும் 5 கட்டத் தேர்தலிலும், மத்திய பாஜக அரசு, எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் பொதுமக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின்போது, ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. சில தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், வரும் 10-ம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
இனிவரும் 5 கட்டத் தேர்தலிலும், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி, நியாயமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் செல்வி மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தினார். Cooch Behar-ல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பொதுமக்கள் வாக்களிக்க சிஆர்பிஎப் வீரர்கள் இடையூறாக இருக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். உண்மையான சிஆர்பிஎப் வீரர்கள் மீது தனக்கு மதிப்பு இருப்பதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் பாஜகவின் சிஆர்பிஎப் வீரர்களுக்கு தான் மரியாதை கொடுக்க மாட்டேன் என்றும் செல்வி மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.