நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : பாதிப்புகளை கட்டுப்படுத்த அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
Apr 8 2021 10:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உயா்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய சூழல் தொடர்ந்து வருகிறது. கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் நுண்மி வேகமாக பரவி வருகிறது. இதனால் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும்' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.