பொதுத் தேர்வுகளை அச்சமின்றி, துணிச்சலுடன் எதிர் கொள்ள வேண்டும் - படிப்பில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தல்
Apr 8 2021 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் பற்றிய கவலை மற்றும் பயத்தை போக்கும் முயற்சியாக மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. 'பரிக்ஷாபி சர்ஷா' என்று பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சி கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இணைய வழியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பரிக்ஷாபி சர்ஷா' நிகழ்ச்சி காணொலி காட்சி வழியில் நடைபெறுவது இது தான் முதல்முறை. இந்நிலையில், மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.