கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரூக் அப்துல்லா : குணமடைந்ததையடுத்து வீடு திரும்பினார்
Apr 8 2021 8:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திரு.பரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார்.
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் 30-ந் தேதி உறுதியானது. இதனையடுத்து அவர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் கடந்த 3-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டதால் பரூக் அப்துல்லா நேற்று மாலை வீடு திரும்பினார். இருப்பினும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த தகவலை அவரது மகனும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும் தனது தந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.