2வது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோதி - பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என வேண்டுகோள்
Apr 8 2021 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திர மோதி, இன்று 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் 1-ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டு 5 வாரங்கள் கழிந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை, பிரதமர் திரு. நரேந்திர மோதி, 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரும் www.cowin.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளில் தடுப்பூசியும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.