பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள இந்தியா ஒருபோதும் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் - பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் கருத்து

May 11 2021 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள இந்தியா ஒருபோதும் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா பொதுமுடக்க நாட்களில் உதவி தேவைபடுபவர்களுக்கு தாமாக முன்வந்து உதவிய நடிகர் சோனு சூட், நாட்டின் தற்போதைய கொரோனா நெருக்‍கடி குறித்து ட்விட்டரில் விமர்சித்துள்ளார். நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே சுகாதாரத்திற்கு செலவிடப்படுவதாகவும், அதனால் நாம் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா, மக்கள் தொகை அதிகமுள்ள நாடு என சொல்லி இதிலிருந்து கடந்து சென்று விட முடியாது என்றும், இந்த தவறை செய்துள்ளோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து எனக்‍ குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்காக சீனா, தைவான், பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் இணைந்து ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுக்‍க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00