கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் மோடி மட்டுமே காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு

May 14 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் மோடி மட்டுமே காரணம் என ஐதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி உள்ளிட்டவற்றிற்கு கடுமையான தடுட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. அந்த வகையில், நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் மோடி மட்டுமே காரணம் என ஐதராபாத் எம்.பி.யும், அகில இந்திய மஜ்லிஸ் இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நிபுணர்கள் கூறுவது போல ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகைக்கும் நாம் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் நாம் உயிர்களை காப்பாற்ற முடியாது என்றும், அதை செய்வதற்கு மோடி அரசு மாதம் தோறும் 30 கோடி தடுப்பூசிகளை கொடுத்து அதை மக்களுக்கு செலுத்தி இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். ஆனால், அதில் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக விமர்சித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00