கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றில் இருந்து மீண்ட 6 மாதங்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் - மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை

May 14 2021 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றில் இருந்து மீண்ட 6 மாதங்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறையின் தற்போதைய அறிவுறுத்தல்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்றில் இருந்து மீண்ட 2 மாதங்களுக்கு பின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அளவை 6 மாதங்களாக உயர்த்த நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் தொற்று ஏற்பட்டவர்களும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றவர்களும், குணமடைந்த 2 மாதங்களுக்குப் பின் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போட வேண்டுமெனவும், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் தடுப்பூசிக்கான தேசிய நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00