கோவாக்சின் தயாரிப்பு முறையை பகிர பாரத் பயோடெக் ஒப்புதல் - தடுப்பூசியை தயாரிக்க பிற மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

May 14 2021 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்க பிற மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இரு நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டால், நாடு முழுவதும் தடுப்பூசி போட 2 ஆண்டுகள் வரை ஆகுமென பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க, தடுப்பூசி தயாரிப்பு முறையை பிற நிறுவனங்களிடம் பகிர வேண்டுமென, டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதலமைச்சர் திரு.ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் பால், கோவாக்சின் தடுப்பூசியின் தயாரிப்பு முறையை பிற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். B.S.L. three ஆய்வக வசதி உள்ள நிறுவனங்கள் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்புக்காக விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்த அவர், செப்டம்பர் மாதத்திற்குள் ஃபைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகளும் இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00