இந்தியாவில் இந்த ஆண்டுக்குள் பொதுமக்‍கள் அனைவருக்‍கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் - நிதி ஆயோக் அமைப்பு அறிவிப்பு

May 14 2021 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்த ஆண்டின் இறுதிக்‍குள் இந்திய மக்‍கள் அனைவருக்‍கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று நிதி ஆயோக்‍ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை அசுர வேகம் காட்டி வரும் சூழலில், அதனை தடுக்‍க ஆயுதமாகக்‍ கூறப்படும் தடுப்பூசிக்‍கு நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்திய மக்‍கள் அனைவருக்‍கும் இந்த ஆண்டின் இறுதிக்‍குள் கொரோனா தடுப்புசி போடப்பட்டுவிடும் என்று நிதி ஆயோக்‍ தெரிவித்துள்ளது. ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்‍கும் என்று நிதி ஆயோக்‍ உறுப்பினர் திரு. பால் நம்பிக்‍கை தெரிவித்துள்ளார். இதற்காக 75 கோடி கோவிஷீல்டு டோஸ்களும், ​55 கோடி கோவேக்‍சின் டோஸ்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், பயலாஜிக்‍கல்-இ-நிறுவனம், சைடஸ் கேடிலா நிறுவனம், ஜெனோவா நிறுவனம் உள்ளிட்டவையும் சுமார் 88 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரித்து வழங்க உள்ளதாகவும் திரு. பால் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இதுவரை நாடு முழுவதும் சுமார் 18 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00