பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Sep 16 2021 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மகாராஷ்ட்ராவில் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். லக்னோவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன், சோனு சூட் வணிகம் செய்ததாகவும், இதில் வரி ஏய்ப்பு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனு சூட், டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துவிட்டு வந்த இரண்டு நாட்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விஷயத்தை இதுவரை தான் அரசியல் ரீதியாக பார்க்கவில்லை என சோனு சூட் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00