நாடு முழுவதும் நாளொன்றுக்கு 77 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Sep 17 2021 8:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

2020-ம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக தினசரி 77 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2020--ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்களின் தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 2020-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 77 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 80 கொலைகளும் பதிவாகியுள்ளன. ஆண்டு முழுவதும் மொத்தமாக 28 ஆயிரத்து 46 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 310 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 2 ஆயிரத்து 679 வழக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 2 ஆயிரத்து 339 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆண்டு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 3 லட்சத்து 71 ஆயிரத்து 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2019-ம் ஆண்டை ஒப்பிடும்போது, 8 புள்ளி 3 சதவீதம் குறைவு என என்.சி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00