குஜராத்தில் 24 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு

Sep 17 2021 8:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத்தில், 24 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுக்‍கொண்டது.

குஜராத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைக்‍ கருத்தில் கொண்டு, அங்கு ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி, அமைச்சரவையில் அடிக்‍கடி மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2 முறை முதலமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடைசியாக முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி பதவி விலகிய நிலையில், தற்போது Bhupendra Patel முதலமைச்சராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில், 24 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக்‍ கொண்டது. காந்திநகர் ராஜாஜி பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத், 24 அமைச்சர்களுக்‍கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக, விஜய் ரூபானி அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் நீக்‍கப்பட்டதால், பலமான கருத்து வேறுபாடுளுக்‍கு இடையே புதிய அமைச்சரவை பதவியேற்றுக்‍ கொண்டது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00