பிரதமர் மோடிக்கு இன்று 71வது பிறந்தநாள் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்து

Sep 17 2021 8:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்‍கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்‍கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் திரு.மோடி நல்ல ஆரோக்‍கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். மேற்குவங்க ஆளுநர் திரு. ஜக்‍தீப் தங்கர், கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில், பிரதமர் திரு. மோடியின் பிறந்தநாளையொட்டி, மரக்‍கன்றுகளை நட்டார். உலகின் மிகப்பெரிய சவாலாக காலநிலை மாற்றம் உள்ளதால், அனைவரும் மரக்‍கன்றுகளை நட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00