புதிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு ஆனதை குறிக்கும் வகையில் எதிர்ப்புப் பேரணி - சிரோமணி அகாலிதள கட்சி சார்பில் இன்று ஏற்பாடு

Sep 17 2021 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆனதை குறிக்கும் வகையிலும் சிரோமணி அகாலிதள கட்சி சார்பில் இன்று எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மக்‍களவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி, 3 புதிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களுக்‍கு, பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் தொடக்‍கம் முதலோ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, சிரோமணி அகாலிதள கட்சியின் ஒரே உறுப்பினரான ஹர்சிம்ரத் கவுர், தனது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், சிரோமணி அகாலிதள கட்சி, மத்திய அரசின் புதிய மசோதாக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரித்தும் சிரோமணி அகாலிதள கட்சி சார்பில் இன்று எதிர்ப்பு பேரணி நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள ஸ்ரீ ராகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் இருந்து நாடாளுமன்றம் வரை கட்சியின் மூத்த தலைவர்கள் திரு.சுக்பீர் சிங் பாதல் மற்றும் திரு.ஹர்சிம்ரத் கவுர் தலைமையில் இந்த மாபெரும் பேரணி நடத்தப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00