பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாள் - ராகுல் காந்தி, அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Sep 17 2021 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளையொட்டி, அவருக்‍கு திரு. ராகுல் காந்தி, திரு. அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திரு.மோடி நல்ல ஆரோக்‍கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் திரு. மோடி, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் நீண்டநாள் வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி என திரு. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்தனை செய்வதாக திரு. கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேற்குவங்க ஆளுநர் திரு. ஜக்‍தீப் தங்கர், கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில், பிரதமர் திரு. மோடியின் பிறந்தநாளையொட்டி, மரக்‍கன்றுகளை நட்டார். உலகின் மிகப்பெரிய சவாலாக காலநிலை மாற்றம் உள்ளதால், அனைவரும் மரக்‍கன்றுகளை நட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்‍கொண்டார். பிரதமர் திரு. மோடியின் வாரணாசி மக்‍களவை தொகுதியில், நள்ளிரவில் 71 தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பிரதமரின் பிறந்தநாளுக்காக 71 கிலோ எடை கொண்ட விசேஷமான லட்டும் தயாரிக்கப்பட்டது. மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் 71 அடி நீள தடுப்பூசி வடிவிலான கேக்கை வெட்டி பா.ஜ.க.வினர் பிரதமரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். ஒடிஷா மாநிலம் பூரியை சேர்ந்த மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், பிரதமர் திரு. மோடியின் உருவத்தை கடல் சிப்பிகளைக்‍ கொண்டு உருவாக்‍கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00