கனமழை - வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்ட விவசாயிகளுக்‍கு ரூ.10,000 கோடி ஒதுக்‍கீடு செய்து மஹாராஷ்டிரா அமைச்சரவை அறிவிப்பு

Oct 13 2021 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்ட விவசாயிகளுக்‍கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்‍கீடு செய்து மஹாராஷ்டிரா அமைச்சரவை அறிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை மஹாராஷ்டிரா மாநிலத்தில் மிகப்பெரும் தாக்‍கத்தை ஏற்படுத்தியது. இதில் பெருமளவில் விவசாயம் பாதிக்‍கப்பட்டது. இதுகுறித்து மஹாராஷ்டிரா அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்‍கீடு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிக்‍கப்பட்ட விவசாய நிலங்களுக்‍கு, ஒரு ஹெக்‍டேருக்‍கு 10 ஆயிரம் ரூபாய் வீதமும், மலர் சாகுபடி உட்பட தோட்டக்‍கலைத்துறை சார்ந்த பயிர்களுக்‍கு ஒரு ஹெக்டேருக்‍கு 15 ஆயிரம் ரூபாய் வீதமும், வற்றாத பயிர்களுக்‍கு, ஒரு ஹெக்‍டேருக்‍கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் என 2 ஹெக்‍டேர் வரை நிலப்பரப்பு உள்ள விவசாயிகளுக்‍கு, இந்த உதவித்தொகை வழங்கப்படும் என மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00