நீட் தேர்வு தொடர்பான முக்‍கிய அறிவிக்‍கையில் தேதி மற்றும் கிழமைகளில் குழப்பம் : தேசிய தேர்வு முகமைக்‍கு மாணவ,மாணவியர் கடும் கண்டனம்

Oct 14 2021 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
NEET தேர்வு தொடர்பான மிக முக்‍கிய அறிவிக்‍கையில், அக்‍டோபர் 14-ம் தேதி புதன்கிழமை என்று குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. National Testing Agency-யின் கவனக்‍குறைவான செயல்பாடு குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்‍கான NEET தேர்வு, செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக மாணவ-மாணவியர் கடந்த சில மாதங்களுக்‍கு முன்பே விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே அனுப்பிய விண்ணப்பங்களில் Gender, Nationality, E-mail address உள்ளிட்ட அம்சங்களில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், மாணவ-மாணவியர், அதனைச் செய்ய அக்‍டோபர் 14-ம் தேதிவரை அவகாசம் அளிக்‍கப்பட்டுள்ளது. NEET தேர்வு உள்ளிட்ட மிக முக்‍கியத் தேர்வுகளை நடத்துவதற்காக அமைக்‍கப்பட்டுள்ள National Testing Agency எனப்படும் அமைப்பு, அக்‍டோபர் 12-ம் தேதியிட்ட தனது Public Notice-ல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், அக்‍டோபர் 14-ம் தேதி, புதன் கிழமை என்று பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அக்‍டோபர் 14-ம் தேதி வியாழக்‍கிழமை ஆகும். நாடு முழுவதும் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியர் NEET தேர்வு எழுதியுள்ள நிலையில், National Testing Agency-யின் இந்த அறிவிக்‍கை பல தரப்பிலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. National Testing Agency-யின் மிக முக்‍கிய அறிவிக்‍கையில், ஒரு குறிப்பிட்ட தேதிக்‍குரிய நாளைக்‍ கூட சரியாக தெரிவிக்‍க முடியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடும் விமர்சனத்திற்குப் பின்னர், National Testing Agency, NEET விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்வதற்கான கடைசி தேதி, அக்‍டோபர் 14 வியாழக்‍கிழமை என்று மாற்றியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00