இரு சக்‍கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் குழந்தைகளுக்‍கு தலைக்‍கவசம் கட்டாயம் - குழந்தைகளுடன் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்‍கூடாது என்றும், புதிய விதிமுறையை வகுத்தது மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சகம்

Oct 27 2021 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
குழந்தைகளை இரு சக்‍கர வாகனத்தில் அழைத்து செல்வோர், 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்‍கூடாது என்றும், இரு சக்‍கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும் குழந்தைகளுக்‍கு தலைக்‍கவசம் கட்டாயம் என்றும் மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சகம் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வரைவு விதிமுறையை, மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரு சக்கர வாகனத்தில் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, குழந்தையை வாகனம் ஓட்டுபவரின் உடலோடு இணைத்துக் கட்டப்படும் கவசம் பயன்படுத்தப்பட வேண்டும். இரு சக்‍கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும் 9 மாதங்களுக்‍கு மேற்பட்ட குழந்தைகள் தலைக்கவசம் அணிந்திருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். பிஐஎஸ்-ஆல் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் கொண்ட தலை கவசங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். 4 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் செல்லும் மோட்டார் சைக்கிளின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டருக்‍கு மேல் இருக்கக்கூடாது. இந்த புதிய விதிமுறை தொடர்பான கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை, அரசுக்‍கு மின்னஞ்சல் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்‍க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மக்‍களுக்‍கு வாய்ப்பளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00